சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பல ஆண்டுகளாக கிடப்பிலிருந்த மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். இது பயன்பாட்டுக்கு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் 14 ரூபாய் மற்றும் டீசல் 18 ரூபாய்க்கு கிடைக்கும்.
இதில் வரும் வருவாயில் எனக்கு 50%, அவருக்கு 50% சதவீதம் என அனைத்தும் கையெழுத்திட்டு தயார் நிலையில் உள்ளது. தனது மூலிகை பெட்ரோல் மூலம் அனைத்து வாகனங்களையும் இயக்கலாம் எனவும் எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளித்துள்ளார்.மேலும் மூலிகை பெட்ரோல் மூலம் சமையல் எரிவாயுவை உருவாக்க முடியும்.அதற்கு கூடுதலாக 200 ரூபாய் மட்டுமே செலவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.