தமிழகத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகனங்களுடைய தேவைகளும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பல பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் மிகப்பெரிய நகரமான சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறைந்து மக்கள் அவர்கள் வேலைகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மெட்ரோ ரயில்களை இந்திய ரயில்வே நிர்வாகத்தை போல ஒரே மாதிரியான கட்டணங்களை பின்பற்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அந்தந்த நகரங்களுக்கு ஏற்றவாறு கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும், சிறிய நகரங்களுக்கு குறைவான கட்டணமும் நிர்ணயிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.