தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருப்பதால் அதனை தொடர்ந்து ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. அதனால் ஊரடங்கு மேலும் நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் போது ஊரடங்கு தளர்வுகள் குறித்து விவாதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.