கள்ளக்குறிச்சியில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியும் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜய் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த விஜயின் அத்தை அந்த மாணவியை கண்டித்துள்ளார். அதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரித்த போது மாணவி திருமண வயதை எட்டியதும் இவருக்கு திருமணம் செய்து வைப்பதாக விஜயின் தந்தை கூறியுள்ளார்.இந்நிலையில் அத்தை அலமேலு தனது மகன் மற்றும் கணவருடன் சேர்ந்து மாணவியை திட்டியதால் மனமுடைந்த மாணவி சேலையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.