தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,325-லிருந்து 1,310-ஆக குறைந்துள்ளது. மேலும் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,956-ஆக உள்ளது. இதற்கிடையே 27,294 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் 5,374 பேர் தொற்று நோயிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை 33,75,281 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 296-ஆக உள்ளது.