தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்பது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.