தமிழகத்தில் கொரோனாவின் கூடாரம், கொரோனாவின் மையம், தமிழகத்தின் ஹாட் ஸ்பாட் என்று வர்ணிக்கப்பட்ட தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. நாளுக்குநாள் அதன் தாக்கம் குறைந்து வருவது புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வருகிறது. சென்னையில் கொரோனா குறைந்து வருவதற்கு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கம் தான் காரணம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பித்து கொரோனவை கட்டுப்படுத்தியது போல வேகமாக பரவி வரும் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவலை தடுக்கலாமா என்ற முடிவு எடுக்க இருப்பதாக தெரிகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3 மடங்கு தொகை அதிகரித்து உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குமரி, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் சில மாவட்டங்களில் ஊரடங்கு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.