தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அதன் முக்கிய பகுதியாக மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முழுமையாக இன்னும் பேருந்துகள் இயக்கப்படாமல் குறைந்த அளவிலான பேருந்துகள், ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெரும்பலான இடங்களுக்கு ரயில்சேவை இல்லாதநிலை தொடர்கிறது. மேலும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. எந்த ரயில் நிலையங்கள் மற்றும் தேதி போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள்,
1. தாம்பரம் – நாகர்கோயில் இடையே அடுத்த மாதம் 26 முதல் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கம்
2..அரக்கோணம் – ஜோலார்பேட்டை (தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்) ஏப்ரல் 10 முதல் இயக்கம்
3.புதுச்சேரி – கன்னியாகுமரி வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 11 முதல் இயக்கம்
4.புதுச்சேரி – மங்களூரு வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 15 முதல் இயக்கம்
5. கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் ஒருமுறை விரைவு ரயில் ஏப்ரல் 16 முதல் இயக்கம்
6. மதுரை – சென்னை எழும்பூர் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 17 முதல் இயக்கப்படுகிறது
7. மதுரை – ஹஷ்ரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 20 முதல் இயக்கம்
8. கோவை – பெங்களூரு வாரம் 6 நாட்கள் விரைவு ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்
9. கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் 6 நாட்கள் சதாப்தி ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்
10. சென்னை சென்ட்ரல் – ஹஷ்ரத் நிஜாமுதீன் கரீப் ரத் வாரம் ஒருமுறை ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.