Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரி”…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது .

தமிழகத்தில் தற்போது வரை 69 தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படிக்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதி தமிழகத்தில் உள்ளது. இந்தியாவில் 8 மருத்துவர்களில் கண்டிப்பாக ஒரு தமிழர் மருத்துவராக இருப்பார். மேலும் தமிழகத்தில் இன்று மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளை கட்டுவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த மேலும் சில மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |