தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைமையிலான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வகையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று முன்தினம் 21 ஐஏஎஸ் அதிகாரிகள், நேற்று 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த நஜிமுதீன், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த நிர்மல் ராஜ், பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்பு செயலாளராக இருந்த வெங்கடேஷ், தமிழ்நாடு டாஸ்மாக் மேலாளர் இயக்குனராக இருந்த மோகன் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.