Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை…. சென்னை வானிலை மையம்….!!!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்து உள்ளது.

இதனால் சென்னை, செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் நாளை நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும், ஓரிரு மாவட்டத்தில் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நாளை மறுநாள் நெல்லை கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஓரிரு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான மழையும், மேலும் 15ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஓரிரு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |