Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 4,150 பேர் பாதிப்பு …. மொத்த எண்ணிக்கை 1,11,151ஆக உயர்வு …!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஒரு பக்கம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பில் ஒரு லட்சம் கடந்த தமிழ்நாடு இந்தியாவிலே அதிகம்  பாதிப்பை சந்தித்த 2ஆவது மாநிலமாக உள்ளது.

நேற்றைய நிலவரம் படி 1,07,001 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 1450 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில் இன்று குறித்த விவரங்கள் வெளியாகியது. அதில் இன்று ஒரே நாளில் மட்டும் 4150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் மொத்த பாதிப்பு 1,11,151ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |