தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டில் காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும் போர் பதற்றத்துடன் தமிழகம் திரும்பும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தேவைப்பட்டால் கொடுக்கப்படும் எனவும், 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு விரைவில் ஐ பாட் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.