தமிழகத்தில் அதிமுகவில் ஏதாவது இடர்பாடுகள் வருமா என நரி காத்துக்கொண்டிருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் திராவிட மண், இங்கு யாராலும் திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்கலாம் என சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் இங்கு நுழைய முடியாது. ஏதாவது இடர்பாடுகள் வருமா என நரி காத்துக் கொண்டிருக்கிறது. இடர்ப்பாடுகள் வருவதற்கு நரிக்கு காலம் இடம் கொடுக்காது. நாகரிகத்துடன் பேச வேண்டும். ஏனென்றால் நாகரிகத்தை கொண்டுவந்தது திராவிட இயக்கம் என அவர் கூறியுள்ளார்.