Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரயில்வே வேலைக்கு தயாராகுபவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் அரசு வேலை அனைவரது வாழ்க்கை இலட்சியங்களில் ஒன்றாக இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் அரசு வேலை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே வேலைக்கு தயாராகி வருவோருக்கு விழிப்புணர்வு பதிவை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

அதாவது, ரயில்வே வேலைக்கு தயாராகி வருபவர்கள் மோசடி இடைத்தரகா் மற்றும் நபா்களால் ஏமாற்றம் அடைவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே ரயில்வே ஆள்சோ்ப்பு வாரியம் குறித்த அறிவிப்பு தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூா்வ வலைதளத்தை மட்டுமே பாா்வையிட வேண்டும். இதற்கிடையில் போட்டி தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு, ரயில்வே வேலைக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆகவே நியாயமற்ற வகையில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து ரயில் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி யாராவது பணம் கேட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் (அ) ரயில்வே உதவி எண் 044 28213185-ஐ தொடர்பு கொள்ளலாம். எனவே விண்ணப்பதாரர்கள், வேலை தேடுவோர் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |