Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரயில் சேவை நீட்டிப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகைகளை ஒட்டி இயக்கப்பட்ட ரயில் சேவை நீட்டிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பண்டிகைகளை ஒட்டி தமிழகத்திற்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை ரயில்கள் ஜூன் 30 வரையும், மைசூர் மற்றும் மயிலாடுதுறை ரயில் ஜூன் 30 வரையும், தூத்துக்குடி மற்றும் மைசூர் ரயில் ஜூலை 1 வரையும், கன்னியாகுமரி மற்றும் கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் ஜூலை 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |