தமிழகத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரவுடிகளின் ஒவ்வொரு அசைவையும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அவ்வகையில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் கூலிப்படை மற்றும் ரவுடிகள்,கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் விதமாக மாநில முழுவதும் போலீசார் ஒரே சமயத்தில் சோதனை நடத்தி 3000 மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இருந்தாலும் அவ்வப்போது ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் ரவுடிகளின் பட்டியலை தயார் செய்துள்ள போலீசார் ரவுடிகள் தஞ்சம் அளிக்கும் அரசியல்வாதிகள் குறித்தும் தகவல்களை திரட்டி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்க தீவிரமாக பணியாற்ற வேண்டும் என அனைத்து போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.