Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம்!…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி….!!!!!!

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. தற்போது முதன் முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட வன அலுவலர் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

இவ்வாறு உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ள 3 நாட்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் தொடர்பாக விசாரித்து வருகிறார். நிறைவு நாளான இன்று தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிரா போன்று தமிழகத்திலும் ரவுடிகளை ஒழிக்க தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் குற்றம் புரிவோருக்கு அலுவலர்கள் உடந்தையாக இருக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்தார்.

Categories

Tech |