Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ராகுல் பிரசாரத்துக்கு தடை ? பெரும் பரபரப்பு …!!

ராகுல் காந்தி அண்மையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சென்றதாக கூறி பாஜக சார்பில் இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதித்த காரணத்தினாலும், பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் நடத்தை விதியை பின்பற்றாத காரணத்தினால் வரக்கூடிய பரப்புரைகளில் அவரை அனுமதிக்க கூடாது. அது மட்டுமல்லாமல் அவர் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரு முக்கியமான விஷயத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்பது வழக்கம் என்றாலும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருக்க கூடிய ராகுல் காந்தி மீது எப்ஐஆர் வழக்கை பதிவு செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டலை குறிப்பிட்ட மாவட்ட கண்காணிப்பாளர் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரியிடம் சத்யபிரதா சாகு விடம்  பாஜக கொடுத்திருக்கிறது.

Categories

Tech |