தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்து இந்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. புயல் காரணமாக பொங்கல் பரிசு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இது தொடர்பான ஆய்வு கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.