தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி தமிழகத்தில் 38 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடம் கல்வியை கொண்டு சேர்ப்பது அரசின் திட்டம். இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் லோகோ வடிவமைப்பு போட்டி ஒன்றை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான லோகோவை உருவாக்கி http://bit.ly/illamthedikalvi என்ற முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழுடன் 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த லோகோவை உருவாக்குவதற்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றுக்குள் சூப்பர் லோகோவை வடிவமைத்த 25 ஆயிரம் ரூபாயை வெல்லுங்கள். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.