தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதிக கனமழை முதல் மிக அதிக கன மழை பெய்யக் கூடும் என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, திண்டுக்கல், தேனி,திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி,திண்டுக்கல் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.