Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகை…..  அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுகளை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து பரிசு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இலவச வேட்டி, சேலையுடன் பொங்கல் தொகுப்பு ஜனவரி 3 முதல் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 பரிசாக வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |