தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு பாக்கெட் செய்யும் பணிகள் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழ் அகதிகளுக்கு உணவு பொருட்கள் அடங்கிய பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பில் 20 வகையான பொருள்கள் உள்ளது. கடந்த டிசம்பர் 20ஆம் தேதி இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,
இந்த தொகுப்பில், அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை போன்ற 20 வகையான பொருட்கள் உள்ளது. இந்த பரிசுப்பொருளுடன் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும். வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.
ஜனவரி 3 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வழங்கப்பட்டுள்ள பொருட்களை பாக்கெட் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாக்கெட் செய்யும் பொருட்களை ரேஷன் கடைகளுக்கு கொண்டு சேர்க்க வாணிப கழகத்தினர் மற்றும் கூட்டுறவு சங்கத்தினர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.