Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் கடைகள்…. மாற்று பணியாளர்கள் மூலம் திறப்பு….? வெளியான தகவல்…..!!!!

தமிழகத்தில் நியாயவிலைகடை ஊழியர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், மாற்று பணியாளர்களை கொண்டு நியாயவிலைக் கடைகள் திறக்க ஏற்பாடு செய்யுமாறு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா்கள் சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கூட்டுறவுச் சங்கப் பதிவாளர், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு, அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொது விநியோகத் திட்டப் பணியாளர்களுக்கு பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக, மாற்று பணியாளர்களை கொண்டு நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ” No work No pay” என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்ளின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |