தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வாங்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து புதிய ரேஷன் கார்டுகள் வாங்க 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு, ரேஷன் கார்டுகள் வழங்க விசாரணை என்ற பெயரில் புரோக்கர்கள், அலுவலகத்திற்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் பொது மக்களை நாடி பணம் கேட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Categories