தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். குறிப்பாக ரேஷன் கடைகளில் இலவச மளிகை பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் தமிழகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு அதிக சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கவும், பொருள்களின் தரத்தை உறுதி செய்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.