Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் இனி கட்?…. அரசு எடுக்கும் அபாய முடிவு….!!!!

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரித்துறையின் உணவு துறை வாயிலாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்துவதற்கான முயற்சி இது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரேஷன் கடைகள் மூலமாக பொருள்களை வழங்கி வரும் நிலையில், தமிழகத்தில் தான்விலையில்லா அரிசி அல்லது கோதுமை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தவிர சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகிய பொருள்கள் மானிய விலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக 2 கோடியே 20 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருப்பது அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம். அதேசமயம் மற்ற மாநிலங்களில் இருப்பது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டம்.

அதன்படி முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ அரிசி 3 ரூபாய் என்ற விகிதத்தில் 5 கிலோ அரிசி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். தமிழகத்தில் வருமான வரி செலுத்துபவர்கள் தவிர அதாவது ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |