Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் லஞ்சம் வாங்கி சிக்கியவர்கள் பட்டியலில்…. வருவாய் துறையினர் முதலிடம்….!!!!

தமிழகத்தில் மக்களுக்குரிய பணியை செய்து தருவதற்கு லஞ்சம் பெற்று கைதானவர்களின் பட்டியலில் வருவாய்த்துறையினர் முதலிடத்தில் உள்ளனர். அடுத்ததாக மின்வாரிய ஊழியர்கள், போலீசார் மற்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால், 604 பேர் சிறை தண்டனை பெற்றுள்ளனர். லஞ்சம் வாங்குவது குற்றம் என்று தெரிந்தும் அதிகாரிகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் வருவாய்த்துறையினர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக, மின் வாரிய ஊழியர்கள் மற்றும் போலீசார் உள்ளனர். தவிர அனைத்து துறைகளிலும் லஞ்ச புகார் தொடர்பாக, 3,111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2011 – 12ல் 37 பேர், 2012 – 13ல் 27, 2013 – 14ல் 21, 2014 – 15ல் 35, 2015 – 16ல் 46, 2016 – 17 ல் 79, 2017 – 18ல் 103, 2018 – 19ல் 115, 2019 – 20ல் 102, 2020 – 2021 மார்ச் 31 வரை 41 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.

Categories

Tech |