தமிழகத்தில் கொரோனாவில் தாக்கம் குறையும் வரையில் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறையும் வகையில் பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் முழுவதும் குறையும் வரையில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் தொடரும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் எளிதில் புரியும் வகையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். மேலும் மாணவர்கள் மன உளைச்சல் மற்றும் உளவியல்ரீதியான சித்தர்களுக்கு ஆளாவதை தவிர்க்கவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரியர் தேர்வுகளை ரத்து செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.