தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அளிக்கப்படவில்லை.
தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 13ம் தேதி வரை தேதி வரை வங்கிக் கிளைகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகளில் பணப் பரிவர்த்தனை நேரம் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம் போல மாலை 5 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.