Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது…. தயார் நிலையில் தீயணைப்பு துறை…. வெளியான தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பேரிடரை எதிர்கொள்ளக்கூடிய வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அனைத்து நிலைகளும் முழு வீச்சில் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்குண்டு நபர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு ரப்பர் படகுகள் மற்றும் மோட்டார் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றவதற்காக பம்புகள் மற்றும் மீட்பு பணகளுக்கான கயிறுகள் மாற்றும் லைப் ஜாக்கெட்  போன்றவை  தயார் நிலையில் உள்ளது என்று  மீட்புப் பணித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரர்கள் கொண்ட நீச்சல் மீட்புக் குழு மற்றும் கயிறு மீட்பு குழுவினர் ஆகிய இரு படைகளும் பேரிடரை எதிர்கொள்ள  தயாராக உள்ளது. அதுமட்டுமில்லாமல் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை அடையாளம் காட்டும் கருவிகள் ரோப்லான்சர், ரோப்ரைடர் மற்றும் தெர்மல் இமேஜிங் கேமரா ஆகியவை உள்ளது. அதனைத் தொடர்ந்து வெள்ள காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும்  தகவல் தொடர்பு சாதனங்களான வாக்கிடாக்கி உள்ளது.

மேலும் தாழ்வான பகுதி மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து குடியிருப்பு பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் அரசு துறைகளுடன் ஒருங்கிணைத்து மீட்புப் பணி மேற்கொள்ளப்படும். மேலும் வானிலை ஆய்வு மையத்தின் தகவலை  உடனுக்குடன் தெரிந்துகொண்டு நிலவரத்துக்கு ஏற்றவாறு மீட்புப் பணித் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

Categories

Tech |