திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி மையம் சார்பாக நெல்லை மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 85 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் இதில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி தற்போது கோவையில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் 30 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழில் தேர்வு எழுதி 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற தேர்வுகள் எழுத முடியும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புது நம்பிக்கை இருந்தால் இளைஞர்கள் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று வந்துள்ளனர் என்று கூறியுள்ளார். சபாநாயகரின் இந்த அறிவிப்பால் மாணவ மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.