கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தமிழகத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கேரளாவில் முதலில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தமிழக எல்லையோர மாவட்டங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலம் மற்றும் பண்டிகை காலங்கள் தொடங்க இருப்பதால் சவால் நிறைந்த காலகட்டம் தொடங்குகிறது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது தமிழகத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது.வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வரும் நபர்கள் அனைவரும் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்”என்று அவர் கூறியுள்ளார்.