தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு காரணம் டெல்டா, டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தான். ஆல்பா உள்ளிட்ட வேறுசில உருமாறிய கொரோனாவும் இனி வரலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை 10 பேருக்கு டெல்டா பிளஸ் உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சட்ட அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.