Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிற ஜூலை 6-ஆம் தேதி…. இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு, அனைத்து மாவட்டத்திலும் உள்ள வழிபாட்டு தலங்களில் வழக்கம் போல், கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கோவில் திருவிழாக்களும், தற்போது வழக்கம் போல்,வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் விழாவானது, வருகின்ற ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று  நடைபெற உள்ளது. இந்நிலையில் இதில் பொதுமக்கள், கலந்து கொள்ள ஏதுவாக அன்றைய தினத்தை,  உள்ளூர் விடுமுறையாக  அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 108- வைணவ ஸ்தலங்களில் ஒன்று  திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகும். ஆனால் இங்கு, பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது.எனவே இந்த ஆண்டு கட்டாயம் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும்  450 ஆண்டுகளுக்கு பின்,  திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வருகின்ற ஜூலை மாதம் 6-ஆம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள ஏதுவாக வருகிற ஜூலை 6-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என  திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், அமைச்சர் மனோதங்க ராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

 

Categories

Tech |