Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருடந்தோறும்…. ஜூன் 3-ல் ரூ.10 லட்சம் பரிசுடன் கலைஞர் விருது….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்கள், அமைப்புகளுக்கு தமிழக அரசின் 21 விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார் .இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியபோது, இனி வருடந்தோறும் ஜூன் 3 ஆம் தேதி ரூபாய் 10 லட்சம் பரிசுத்தொகையுடன் கலைஞர் விருது தரப்படும்.

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய மாபெரும் புத்தகப் பூங்கா தமிழகத்தில் அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் மிகவும் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் இந்த விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். 3,500 ஆண்டுகள் பழமையான இனம் தமிழ் இனம் ஆகும் என்றும் கூறினார்.

Categories

Tech |