Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கும். அப்படி மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.

இதையடுத்து இந்த விடுமுறைக்கு பதில் மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும். தற்போது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழா வருகிற பிப்ரவரி 16ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இங்கு வருடந்தோறும்  நடைபெறும் கந்தூரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தர்காவில் ஒலியுல்லாஹ் என்னும் இஸ்லாமிய சூபி அடக்கம் செய்யப்பட்டு உள்ளார். இப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த கந்தூரி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

இதன் காரணமாக பிப்ரவரி 16ஆம் தேதியான புதன்கிழமை அன்று மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்படும். இதற்கு பதிலாக பிப்ரவரி 26ஆம் தேதியான சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிப்…16ஆம் தேதி தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலகங்களில் அரசு சார்ந்த அவசர பணிகள் மேற்கொள்ள தேவையான பணியாளர்கள் கொண்டு செயல்படும் என்று அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |