ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது.
இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் கோடை விழா நடத்தலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், ஏற்காடில் 45வது கோடைவிழா வரும் 26ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது என்றும், 5 லட்சம் மலர்களைக் கொண்டு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, மாம்பழ கண்காட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்துள்ளார்.