தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 28 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த அடிப்படையில் மார்ச் 26, 27, 28 ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் இருநாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. எனினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.