தமிழகத்தில் வரிவிதிப்பு மற்றும் வருவாய் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் கூடுதல் செயலாளர் எஸ். முருகானந்தம் வரி விதிப்பு மற்றும் வருவாய் தொடர்பான அரசாணை குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பிற்கான ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பீ. டட்டார் தலைமையில் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது,
- கே. வேல்முருகன் [தலைவர்] ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைப்பு
- ஸ்ரீவத்ஸ் ராம் [மேலாண்மை இயக்குனர்] வீல்ஸ் இந்தியா லிமிட்
- சுரேஷ் ராமன் [துணைத் தலைவர் மற்றும் மண்டலத் தலைவர்] டி.சி.எஸ் சேவைப் பிரிவு
- சி.நடராஜன் [வழக்கறிஞர்] சென்னை உயர்நீதிமன்றம்
- சி. வைத்தீஸ்வரன் [வழக்கறிஞர்] சென்னை உயர்நீதிமன்றம்