தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றைய ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால் காவலர்களுக்கு விடுமுறை வழங்கக்கூடாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தின் போது மாநிலத்தில் ஏதேனும் சிறிய அளவில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது பேரவையில் எதிரொலிக்கும். இதையடுத்து காவலர்களுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.