விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்தார்.
புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய கட்டுமானங்கலில் விதிமீறல்கள் நடந்தால் கடந்த காலங்களை போல அனுமதிக்கப்பட மாட்டாது. அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்டதிட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும்.
கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து Completion சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு பெற முடியும். இந்த சட்ட திட்டத்தை அரசு, தனியார் கட்டுமான நிறுவனங்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றார்.