Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம்…. 2 பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வானது பிப்…9 ம் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் அனைத்தும் பொதுத்தேர்வு போன்றே நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா அவர்கள் 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்கானது குறித்து 2 தனியார் பள்ளிகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..

Categories

Tech |