Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில்….. “உயர்கிறது ஆட்டோ கட்டணம்”….. புது கட்டணம் எவ்வளவு தெரியுமா?….!!!!

தமிழகத்தில் உள்ள ஆட்டோ சங்கங்கள் ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். போக்குவரத்து துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தி திருத்தப்பட்ட கட்டண பரிந்துரையை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் விரைவில் ஆட்டோ கட்டணம் அதிகரிக்கும். ஏற்கனவே கேஸ், சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை என அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அவசர தேவைக்கு பயன்படும் ஆட்டோ கட்டணம் உயர்வது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

Categories

Tech |