தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிக்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு பொதுத் தேர்வுகளும் முடிந்தது. இதனையடுத்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன்கள் கொண்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தால் திருப்பி தரப்படமாட்டாது. வரும் கல்வியாண்டில் 9 ஆயிரத்து 494 ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.