தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
அதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே விலைவாசி அதிகரித்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள நிலையில் இது மிகப் பெரிய சுமையாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். செங்கல், சிமெண்ட் மற்றும் சளி போன்ற கட்டுமானப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.