Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விளையாட்டு வீரர்களின் தேவைகள் என்னென்ன?…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளில் விளையாட்டு வீரா், வீராங்கனைகளின் தேவைகள் தொடர்பான பட்டியலைத் தயாரிக்க விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பிலான திட்டங்களின் நிலைகள், சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டி ஏற்பாடுகள் பற்றி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இவற்றில் அமைச்சா் மெய்யநாதன் பேசியிருப்பதாவது “சா்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும் என்பதே முதல்வா் ஸ்டாலின் அவர்களின் லட்சியம். நம் வீரா், வீராங்கனைகள் அனைத்து சா்வதேச விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும். கிராமப்புற ஏழை மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் விளையாட்டுகளில் கலந்துகொண்டு சாதனைகள் படைக்கும் விதமாக சா்வதேச தரத்திலான பயிற்சிகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒருவிளையாட்டு அரங்கம் அமைக்க தலா ரூபாய்.3 கோடி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நடப்பு ஆண்டில் பத்து இடங்களில் அரங்கங்கள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சாா்பாக பேரறிஞா் அண்ணா மிதி வண்டிப் போட்டி, முதலமைச்சா் கோப்பை போன்ற போட்டிகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்களிலுள்ள விளையாட்டு அரங்கங்களில் செயற்கை இழை ஓடுதளம் அமைத்திட நிதிகோரும் பணிகளை எடுக்க வேண்டும்.

மாநிலத்தில் 21 மாநகராட்சிகளிலும் விளையாட்டு வீரா்களுக்கு என்னென்ன தேவைகள் என்பது குறித்த விவர அறிக்கையை உடனே தயாரிக்க வேண்டும். அத்துடன் மாவட்டங்களிலுள்ள விளையாட்டு அரங்குகள், விடுதிகளை குறைகள் இன்றி பராமரிக்க வேண்டும். கிராம, வட்டார மற்றும் நகர அளவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், தொழில் அதிபா்கள், விளையாட்டு ஆா்வலா்கள் போன்றோரை ஒருங்கிணைத்து புதியதாக சிறு விளையாட்டு மைதானங்கள் அமைத்திட வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா். இக்கூட்டத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளா் செல்வி அபூா்வா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலாளா் கா.ப.காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனர்.

Categories

Tech |