தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கான சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியுள்ளது. முன்னதாக கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்துள்ளார். முதல் நாளான இன்று நீர்வள துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேளாண் மற்றும் உள்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். செங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, செங்கம் தொகுதியில் 30 ஆண்டுகளாக அனைத்து வசதிகளும் கொண்ட ராட்சச கிணறு மற்றும் 12 ஆயிரம் ஏக்கரில் விதைப்பண்ணை இருந்துள்ளது. தற்போது அது விவசாயிகளின் பண்ணையாக மாற்றி அமைக்கப்படும் என கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கேள்விக்கு வேளாண்துறை அமைச்சர் முதலமைச்சரின் ஆட்சியில் இரண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். இதனையடுத்து வேளாண்மை துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் B.Sc., Agriculture படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினார். இந்த முக்கிய கேள்விக்கு, சோளிங்கர் தொகுதி, கொடைக்கல் கிராமத்தில் ரூ.94 லட்சம் மதிப்பில் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வேளாண் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
மேலும், கடந்த 10 மாத காலத்தில் 27 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளை பொருட்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாகவும், மேலும் தேவைக்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உருவாக்கப்படும் என கூறியுள்ளார்.