Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை…. 18 மாவட்டங்களில் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் தென்கிழக்கு அரபிக்கடல்,கேரளா மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .

Categories

Tech |